திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 95 இல் நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்னும் தலைப்பில் பி.ஜே கூறியிருப்பதன் சுருக்கமாவது:
உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. (திருக்குர்ஆன்: 3:81)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை இவ்வசனம் கூறுகிறது. இதில் உங்களிடம் ஒரு தூதர் வந்தால் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வசனம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வசனம் குறிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக் காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
கில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி: அவர் பூமியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.
கில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் தூதராக அனுப்பபடுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்கவேண்டும்? நபிகள் நாயகத்தை தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டபட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். இவ்வசனத்திலிருந்து கில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.
நம் விளக்கம்:
திருக்குர்ஆன் 3:82-83 வசனத்தில் கூறப்பட்டபடி
1. எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கையை எடுக்கிறான் திருக்குர்ஆன் 33:8 வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்களிடமும் இந்த உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
2. உறுதி மொழியாவது: வேதத்தையும் ஞானத்தையும் தந்த பின் அதை மெய்ப்பிக்கும் தூதர் (உண்மைப்படுத்தும் தூதர்) உங்களிடம் வருவார்.
3. அப்படி வந்தால், அவர் மீது ஈமான் கொண்டு, அவருக்கு உதவி செய்ய வேண்டும்.
4. இந்த உடன்படிக்கைப் புறக்கணிக்கின்றவர் வரம்பு மீறியவர்கள் ஆவர் என்று கூறுகிறது.
பி.ஜே ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இந்த வசனம் குறிக்கிறது என்கிறார். இது தவறு. எப்படி?
1. தூதரிடம் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் (அல்லாஹ்விடம்) எடுக்கின்ற உறுதிமொழி தான் என்று பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 334 இல் கூறுவதே அவர்க்கு பதிலாகும்.
2. உதாரணமாக் மூஸா நபிக்கு வேததையும் ஞானத்தையும் கொடுத்தபின், அவர் காலத்தில் உடன் இருந்த ஹாரூன் நபி வந்தார். அப்படி வந்தவர் அவற்றை மெய்ப்பிக்க வந்தார் என்று திருக்குரானோ நபிமொழிகளோ கூறவில்லை. வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அதை உண்மைப்படுத்தும் தூதர் அவரிடம் ஏன் வர வேண்டும்?
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், இறைத் தூதர்கள் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய இருவரும் (தற்போது) உயிருடன் இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு வழியில்லை. (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 3:81 வசனத்தின் விளக்கம்) என்று கூறியுள்ளார்கள்.
3. வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டம் வரும்போது மெய்ப்பிக்கும் தூதர் வரவேண்டுமே தவிர வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழும் காலத்தில் வர வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் அவரே அவற்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் அம்மக்களை அதன் வழியில் நடத்திக் கொண்டும் இருப்பார்.
4. திருக்குரானில் மெய்ப்பிக்கும் தூதர் என்று ஏறக்குறைய 3 இடங்களில் ஈஸா நபியைப் பற்றி கூறப்பட்டுள்ளது. (3:51,5:47,61:7) ஈஸா நபியோ தவ்ராத்தை மெய்ப்பிக்க மூஸா நபியின் காலத்தில் வரவில்லை. மாறாக 1400 ஆண்டுகள் கழிந்து தோன்றினார்.
பி.ஜே கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
இக்கருத்து முற்றிலும் தவறாகும். எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒருவர் நபியாக வருகிறார் என்றால்,
1. நபி (ஸல்) அவர்கள் அந்த நபி மீது ஈமான் கொண்டு அவர்க்கு நபி (ஸல்) உதவி புரிய வேண்டும்.
2. அந்த நபி, நபி (ஸல்) அவர்களின் வேதமாகிய திருக்குரானையும் அதன் ஞானத்தையும் (நபிமொழிகளையும்) உண்மைப் படுத்துவார். ஏனென்றால் உங்களிடம் வந்தால் என்றால் பி.ஜேயின் விளக்கத்தின்படி நபி (ஸல்) அவர்களிடம் வேறொரு தூதர் வந்தால் என்பதுதான் பொருள். இது சரியா?
முஸ்லிம்களும் கில்ரு நபியும்:
நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி கில்ரு நபி இறந்துவிட்டார். எனவே அவர் உயிருடன் இல்லை என்று பி.ஜே எழுதியுள்ளார் என்றால், ஈஸா நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பபடுகிறார்கள். என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
நபிகள் நாயகத்தை தேடி ஈஸா நபி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் ஈஸா நபி இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
இவ்வசனத்திலிருந்து ஈஸா நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் திருக்குரானில் 33:8 வசனத்தில் உம்மிடத்தில் என்று நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் ஈஸா நபியிடத்தும் அந்த உடன்படிக்க வாங்கப்பட்டிருப்பதால் ஈஸா நபியின் உம்மத்தினர், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர் அவர்க்கு பிறகு வருபவரிடமும் ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது.
(61:7, 5:47, 3:51 ஆகிய வசனங்கள்) இதில் 61:7 வது வசனத்தைக் காண்போம்.
மர்யமின் மகன் ஈஸா தன சமுதாயத்தினரிடம், இஸ்ராயீல் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை உண்மைப்படுத்தக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் வரப்போகின்ற அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறினார்.
உண்மைப்படுத்தும் தூதரின் இலக்கணத்தில் இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
1. ஈஸா நபி, மூஸா நபி வாழும் போது அவரிடம் வரவில்லை.
2. மூஸா நபியின் மறைவுக்குப் பின் வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய ஒரு காலகட்டத்தில் அதாவது 1400 ஆண்டுகள் கழித்து ஈஸா நபி வருகிறார்.
3. மூஸாவின் உம்மத்தில் தான் வருகிறார்.
4. இஸ்ரவேல் மக்களிடம் அவர்தான் இந்த வேதத்தை உண்மைப்படுத்த உங்களிடமிருந்து வந்த தூதர் என்று இறைவன் கூறுகிறான்.
5. தனக்குப் பிறகு – ஈஸாவின் மரணத்திற்குப் பிறகு உலகில் வரக்கூடிய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தியும் வழங்குகிறார். அதாவது அஹ்மது நபியைப் பற்றி.
திருக்குர்ஆன் 61:7 இல், ஈஸா நபி தனக்குப் பிறகு அஹ்மத் என்பவரைப் பற்றி நற்செய்தி கூறுகிறேன் என்று கூறுகிறாரே அவர் யார்?
61 வது அதிகாரம் அவர் முஸ்லிம் உம்மத்தில் வரக்கூடிய உம்மத்தி நபி என்று வருகிறது.
1. வானங்களிலும் பூமியிலுமுள்ளவை எல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்தன என்று கூறி, இஸ்லாத்தில் நின்றுவிட்ட இறைத்தூயமையை மீண்டும் எடுத்துரைக்க வரக்கூடியவர்.
2. நம்பிக்கை கொண்டவர்கள் என்று திருக்குர்ஆன் முஸ்லிம்களைப் பார்த்துதான் அழைக்கிறது. இச்சொல் (61:3, 61:11, 61:15) இந்த அதிகாரத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்று முஸ்லிம்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த அத்தியாயம் முஸ்லிம்களைப் பற்றி பேசும் அத்தியாயமாகும்.
3. நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களிடம் பிற்காலத்தில் காணப்படும் நிலையைப் பற்றி வது 61 அதிகாரம் கூறுவதாவது: 61:4-5
அ) செய்யாததை சொல்லுதல். (61:3)
ஆ) இவ்வாறு சொல்லி இறைவனின் வெறுப்புக்கு ஆளாகுதல். (61:4)
இ) உறுதிவாய்ந்த ஒரு சுவரைப் போல் ஒரு வரிசையில் நிற்காமல், 72 பிரிவுகளாக பிறிந்து தமக்குள் சண்டைப் போடுதல். (61:8)
4. அஹ்மது நபியை – அந்த 72 பிரிவுகளும் நீர் இஸ்லாத்தில் இல்லை. அதற்கு வாரும் என்று அழைப்பார்கள். (61:8)
5. அஹ்மது நபி கொண்டு வந்த இறையோளியை ஆலிம்கள் தங்கள் வாய்களால் பத்வா – மார்க்கத்தீர்ப்பு கூறி அணைக்க முயல்வார்கள். அல்லாஹ்வோ அந்த ஒளியை முழுமைப் படுத்துவான்.
இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இருவகையான தோற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பு இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி மூஸா(அலை) செய்துள்ள முன்னறிவிப்பு நிறைவேறும். (உபாகமம் 18:18-20) என்பதும்.
எனக்குப் பின்னர் அஹ்மது என்னும் பெயர் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவர் என்பது, 62:4 இல் குறிப்பிடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வருகையைக் குறிக்கும். இது அஹமதிய்யா ஜமாஅத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் வருகையின் மூலம் நிறைவேறிற்று.
6. இணை கற்பிப்போம் (இதனை) எந்த அளவு வெறுத்தாலும் சரியே. அவனே தனது தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் – இதனை அவன் எல்லா மார்க்கத்தின் மீதும் வெற்றி பெற செய்வதற்காக அனுப்பினான். (61:10)
இந்த முன்னறிவிப்பு மஸீஹின் காலத்தில் நிறைவேறும் என்று தப்ஸீர்கள் கூறுகின்றன. இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் காலத்தில் இது நிறைவேறியது. அவர்கள் பிற மார்க்கங்களை விட இஸ்லாமே சிறந்தது என்பதை தம் பேச்சு, எழுத்து மூலம் நிரூபித்துள்ளார்கள்.
7. அக்காலத்தில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். (61:11) எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள். மார்க்கத்தை வியாபாரம் எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள், மார்க்கத்தை வியாபாரம் ஆக்கி காசேதான் கடவுளடா என்று வாழ்வார்.
8. 72 பிரிவுகளும் அல்லாஹ்வையும், அந்த அஹமத் நபியையும் நம்பாமலும் இறைவழியில் அறப்போர் செய்யாமலும் வாழ்வார்கள். இக்காலத்தில் தான் ஈஸா நபி நற்செய்தி கூறிய அஹமது எனும் மெய்ப்பிக்கும் தூதர் வருவார். எப்படி?
1
|
மூஸா
|
முஹம்மது (ஸல்)
|
2
|
தவ்ராத்
|
திருக்குர்ஆன்
|
3
|
1400 ஆண்டுகளுக்குப் பின் ஈஸா நபி
|
1400 ஆண்டுகளுக்குப் பின் அஹ்மது நபி
|
4
|
தவ்ராத்தை மெய்ப்பித்தல்
|
திருக்குரானை மெய்ப்பித்தல்
|
எனவே, முழு உலகமும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்த உடன்படிக்கையின்படி. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது அலை அவர்களை ஏற்று, அவர்க்கு உதவி புரிய வேண்டும்.
மேலும் திருக்குர்ஆன் 62:4 இல் அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்று வருகிறது. இந்த வசனத்திற்கு ஹதீஸில் இவ்வாறு வருகிறது.
ஹஸ்ரத் முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இங்கு கூறியுள்ள மற்றவர்கள் என்பவர் யார் என்று கேட்டார்கள். அதற்கு, அவர்கள் ஹஸ்ரத் சல்மான் பார்ஸி(ரலி) அவர்களின் தோளில் கைவைத்து, நம்பிக்கை ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றுவிட்டாலும் பாரசீக இனத்தைச் சேர்ந்த இவரின் தொன்றல்களுள் ஒருவர அல்லது பலர் அதனைத் திரும்பக் கொண்டு வருவர் என்று பதிலளித்தார்கள். (புகாரி 4897)
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் சல்மானுள் பார்ஸி வம்சத்தில் தோன்றியவர்கள் ஆவார்கள்.
அப்துல் வஹ்ஹாப் அடிக்குறிப்பு எண் 262 இல்
12000 பேர் கொண்ட மக்கத்துப் படைக்கும் 3000 பேர் கொண்ட முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த போர் அகழ்ப் போர். 12000 பேரை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் தன் நாபிச் தோழரிடம் ஆலோசனை செய்தார்கள். அப்போரை சல்மான் பாரிஸ்(ரலி) அவர்கள், மதீனாவைச் சுற்றி ஒரு அகழ் வெட்டி எதிரிகளைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
10 முழம் ஆழமும், 40 முழம் அகலமும் கொண்ட ஒரு அகழியை வெட்டினார்கள் 25 நாட்கள் முற்றுகை நீடித்தது. இறுதியில் முற்றுகையை கைவிட்டு எதிரிகள் திரும்பினர். அப்போது அன்சார் தோழர்கள் சல்மானு மின்னா (சல்மான் பாரிஸ் எங்களை சேர்ந்தவர்) என்றும் முஹாஜிர்கள் (சல்மானு மின்னா) என்றும் கூறினார்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மானு மின்னா அஹ்லுல் பைத் – சல்மான் எம்மைச் சேர்ந்தவர். எம் குடும்பத்தினர் என்று கூறினார்கள்.